குறள் - 0199
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
பயனில சொல்லாமை - Against Vain Speaking
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
மு.வ உரை:
மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
கருணாநிதி உரை:
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
Couplet:
Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.
Explanation:
The men of vision pure, from wildering folly free,
Not e'en in thoughtless hour, speak words of vanity.

பரிமேலழகர் உரை
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்= பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார்;
மருள் தீர்ந்த மாசறு காட்சியவர்= மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினை உடையார்.

பரிமேலழகர் உரை விளக்கம்
தூயஅறிவு= மெய்யறிவு. 'மருள்தீர்ந்த' என்னும் பெயரெச்சம், 'காட்சியவர்' என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும், பயனில சொல்லாமையின் குணம் கூறப்பட்டது.

No comments