Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0198

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
பயனில சொல்லாமை - Against Vain Speaking

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல்.

மு. உரை:
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

பரிமேலழகர் உரை :
அரும் பயன் ஆயும் அறிவினார்= அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவினை உடையார்;
பெரும் பயன் இல்லாத சொல் சொல்லார்= மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்.

பரிமேலழகர் உரை விளக்கம்:
அறிதற்கரிய பயன்களாவன: வீடுபேறும், மேற்கதிச்செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே, பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.

கருணாநிதி  உரை:
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

Couplet:
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.

Explanation:
The wise who weigh the worth of every utterance, 
Speak none but words of deep significance.


No comments