குடையும் குப்புசாமியும்
பெரிய ஆலமரம்
. அதனடியில் ஒரு நாற்காலி.
குப்புசாமி அதில் உட்கார்ந்தார்.
சுண்டல் பொட்டலத்தை பிரித்தார்.
அப்போது வானம் இருண்டது.
தூறல் விழத் தொடங்கியது.
குப்புசாமி குடையை விரித்தார்
பெரு மழை பெய்தது;
வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடியது.
வெள்ளம் குப்புசாமியை குடையோடு
அடித்து சென்றது.
அதோ...! கடல்...!
கடல்...!
வாயை திறந்து கொண்டு
பெரிய திமிங்கலம்.
குப்புசாமி திமிங்கலத்தின் வாய்க்குள் சென்றார்.
உள்ளே சென்ற குப்புசாமி திமிங்கலத்தின்
வயிற்றில் ஓங்கி உடைத்தார்.
திமிங்கலம் ‘ப்பூ!’
என்று உமிழ்ந்தது.
குப்புசாமி வானத்தில்
பறந்தார்
மழை நின்றது; காற்றின்
வேகமும் குறைந்தது
குப்புசாமி மெல்ல மெல்லத்
தரை இறங்கினார்.
‘தொப்’ பென்று விழுந்தார்.
‘அப்பாடா!
இனி சுண்டல் சாப்பிடலாம்!’
சுவைத்து சாப்பிட தொடங்கினார் குப்புசாமி.
- தமிழ் நாட்டு பாடநூல் கழகம்
No comments