Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0197

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
பயனில சொல்லாமை - Against Vain Speaking

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.

மு. உரை:
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

பரிமேலழகர் உரை:
நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக= நீதியொடு படாத சொற்களைச் சான்றோர் சொன்னாராயினும் அஃதுஅமையும்;
பயன் இல சொல்லாமை நன்று= அவர் பயன்இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
'சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. 'நயனில'வற்றினும், 'பயனில' தீய என்பதாம்.

கருணாநிதி  உரை:
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா உரை:
நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.

Couplet:
Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.

Explanation:
Let those who list speak things that no delight afford,
'Tis good for men of worth to speak no idle word.

No comments