Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0191

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பயனில சொல்லாமை - Against Vain Speaking

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

மு.வ உரை:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

பரிமேலழகர் உரை

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்= அறிவுடையார் பலருங் கேட்டு வெறுப்பப் பயனிலவாகிய சொற்களைச் சொல்லுவான்;

எல்லாரும் எள்ளப் படும்= எல்லாரானும் இகழப் படும்.

பரிமேலழகர் உரை விளக்கம்

அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றனுருபு விகாரத்தால் தொக்கது.


கருணாநிதி  உரை:
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

Couplet:
He who to the disgust of many speaks useless things will be despised by all.

Explanation:
Words without sense, while chafe the wise,
Who babbles, him will all despise.

No comments