குறள் - 0183
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
புறங்கூறாமை - Not Backbiting
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
மு.வ உரை:
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் செ?ல்லும் ஆக்கத்தைத் தரும்.
பரிமேலழகர் உரை
புறங்கூறிப் பொய்த்து உயிர்வாழ்தலின்= பிறனைக் காணாதவழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்;
சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்= அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், சாதல் ஆக்கந்தரும் என்றார். ஆக்கம் அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். அறம் ஆகுபெயர். தரும் என்பது இடவழுவமைதி.
கருணாநிதி உரை:
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.
சாலமன் பாப்பையா உரை:
காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
Couplet:
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.
Explanation:
'Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh.
No comments