Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0144

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பிறனில் விழையாமை - Not Coveting another's Wife

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்

தேரான் பிறனில் புகல்.

மு.வ உரை:

தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.

பரிமேலழகர் உரை 
எனைத் துணையர் ஆயினும் என்னாம்= எத்துணைப் பெருமைஉடையர் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும்;
தினைத் துணையும் தேரான் பிறன் இல் புகல்= காம மயக்கத்தால் தினையளவமு தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி 'என்னாம்' என்றார். "என்னீர் அறியாதீர் போல விவை கூறின் நின்னீர வல்ல நெடுந்தகாய்" (பாலைக்கலி- 5)என்புழிப்போல உயர்த்ற்கட் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் தம்மை ஐயுறாத பிறன் என்று உரைப்பாரும் உளர்.

கருணாநிதி  உரை:

பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?.

Couplet:

However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?.

Explanation:

How great soe'er they be, what gain have they of life,

 Who, not a whit reflecting, seek a neighbour's wife.

No comments