Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0099

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

இனியவை கூறல் - The utterance of pleasant words

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

மு.வ உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.

பரிமேலழகர் உரை

இன்சொல் இனிது ஈன்றல் காண்பான்= பிறர்கூறும் இன்சொல் தனக்கின்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்;

வன்சொல் வழங்குவது எவன்கொல்= அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்லுவது என்ன பயன் கருதி?

பரிமேலழகர் உரைவிளக்கம்

இனிதென்றது வினைக்குறிப்புப்பெயர். கடுஞ்சொற் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.

கருணாநிதி  உரை:
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?.

Couplet:
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?.

Explanation:
Who sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellant words?.

No comments