Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0091

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இனியவை கூறல் - The utterance of pleasant words

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் 
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

மு. உரை:
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

பரிமேலழகர் உரை:
இன்சொல்= இன்சொலாவன;
ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்= அன்போடு கலந்து வஞ்சனையிலவாய் இருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
'ஆல்' அசைநிலை. அன்போடு கலத்தல்= அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறின்மை= வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கெல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின், 'செம்பொரு'ளெனப் பட்டது. இலவாஞ் சொ்ல்லென இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீய சொற் பயிலாவென்பது அறிவித்தற்கு.
இதனான் இன்சொற்கு இலக்கணங் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

Couplet:
Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.

Explanation:
Pleasant words are words with all pervading love that burn; 
Words from his guileless mouth who can the very truth discern.



No comments