Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0016

அறத்துப்பால் - Virtue

பாயிரவியல் - Prologue 

வான் சிறப்பு - The Blessing of Rain

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

மு.வ உரை:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

பரிமேலழகர் உரை:

(இதன் பொருள்)விசும்பின் துளி வீழின் அல்லால் = மேகத்தின் துளி வீழின் காண்பதல்லது;

மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பு அரிது = வீழாதாயின், அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது.

பரிமேலழகர் உரைவிளக்கம்:

'விசும்பு' ஆகுபெயர்.

'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.

இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது; ஓரறிவு உயிரும் இல்லை என்பதாம்.

கருணாநிதி  உரை:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

Couplet:
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.

Explanation:
If from the clouds no drops of rain are shed. 'Tis rare to see green herb lift up its head.

No comments