Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0012

அறத்துப்பால் - Virtue
பாயிரவியல் - Prologue 
வான் சிறப்பு - The Blessing of Rain

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

மு. உரை:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி = உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி;
துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை= அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
தானும் உணவாதலாவது தண்ணீராய் உண்ணப்படுதல்.
சிறப்புடைய உயர்திணைமேல் வைத்துக் கூறினமையின் அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.

கருணாநிதி  உரை:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தியாகத்தைச் செய்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

Couplet:
Rain produces good food, and is itself food.

Explanation:
The world its course maintains through life that rain unfailing gives; Thus rain is known the true ambrosial food of all that lives.

No comments