Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0007

அறத்துப்பால் - Virtue
பாயிரவியல் - Prologue
கடவுள் வாழ்த்து - The Praise of the God

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

மு. உரை:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

பரிமேலழகர் உரை:
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் = ஒருவாற்றானும் தனக்கு நிகர்இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கல்லது;
தாள் சேராதார், பிறவிக்கு ஏதுவாகிய காம வெகுளி மயக்கங்களை மாற்ற மாட்டாமையின், பிறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.

கருணாநிதி  உரை:
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.
Couplet:
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.
Explanation:
Unless His foot, 'to Whom none can compare,gain, 'This hard for mind to find relief from anxious pain.


No comments