Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0196

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பயனில சொல்லாமை - Against Vain Speaking

பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் 

மக்கட் பதடி யெனல்.

மு.வ உரை:

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

பரிமேலழகர் உரை 
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்= பயனி்ல்லாத சொற்களைப் பலகாலும் சொல்லுவானை மகனென்று சொல்லற்க;
மக்கட் பதடி எனல்= மக்களுள் பதர் என்று சொல்லுக.
பரிமேலழகர் உரை விளக்கம்
'அல்' விகுதி வியங்கோள்; முன் எதிர்மறையினும், பின் உடம்பாட்டினும் வந்தது. அறிவென்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறுபாட்டானும், பயனில்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

Couplet:

Call not him a man who parades forth his empty words. Call him the chaff of men.

Explanation:

Who makes display of idle words' inanity, 

 Call him not man, -chaff of humanity!.


No comments