Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0179

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

வெஃகாமை - Not Coveting

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.

மு.வ உரை:
அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.

பரிமேலழகர் உரை

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்= இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை;

திரு திறன் அறிந்து ஆங்கே சேரும்= திருமகள் தான் அடைதற்கு ஆம்கூற்றினை அறிந்து அக்கூற்றானே சென்று அடையும்.

பரிமேலழகர் உரை விளக்கம்

அடைதற்காங் கூறு காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும், வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.


கருணாநிதி  உரை:
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.

Couplet:
Lakshmi, knowing the manner (in which she may approach) will immediately come to those wise men who, knowing that it is virtue, covet not the property of others.

Explanation:
Good fortune draws anigh in helpful time of need,
To him who, schooled in virtue, guards his soul from greed.

No comments