Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0175

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

வெஃகாமை - Not Coveting

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

மு.வ உரை:
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.

பரிமேலழகர் உரை(இதன் பொருள்)

அஃகி அகன்ற அறிவு என் ஆம்= நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம்மறிவு என்னபயத்ததாம்?

வெஃகி யார்மாட்டும் வெறிய செயின்= பொருளை விரும்பி யாவர்மாட்டும் அறிவொடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின்.

பரிமேலழகர் உரை விளக்கம்

'யார்மாட்டும் வெறிய செய்த'லாவது, தக்கார்மாட்டும் தகாதார் மாட்டும் இழிந்தனவும் கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன் அவை செய்யாமை யாகலின் 'அறிவென்னாம்' என்றார்.

கருணாநிதி  உரை:
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.

Couplet:
What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?.

Explanation:
What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?.

No comments