குறள் - 0171
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
வெஃகாமை - Not Coveting
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
மு.வ உரை:
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
பரிமேலழகர் உரை
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின்= பிறர்க்கு உரியன் கோடல் நமக்கு அறன் அன்று என்னும் நடுவுநிலைமை இன்றி அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்;
குடிபொன்றிக் குற்றமும் ஆங்கேதரும்= அவ் வெஃகுதல், அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
குடியை வளரச்செய்து, பலநன்மையும் பயக்கும் இயல்புபற்றி, பொருள் வெஃகின் என்பார், 'நன்பொருள் வெஃகின்' என்றார். பொன்ற வென்பது, 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.
கருணாநிதி உரை:
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.
Couplet:
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
Explanation:
With soul unjust to covet others' well-earned store,
Brings ruin to the home, to evil opes the door.
No comments