Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0149

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பிறனில் விழையாமை - Not Coveting another's Wife

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

மு.வ உரை:
கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றால் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்.

பரிமேலழகர் உரை 

நாம நீர் வைப்பின்= அச்சந் தரும் கடலாற் சூழப்பட்ட உலகத்து;

நலக்கு உரியார் யார் எனின்= எல்லா நன்மைகளும் எய்துதுற்கு உரியார் யாவரெனின்; பிறற்கு உரியாள் தோள் தோயாதார்= பிறன் ஒருவனுக்கு உரிமையாகியாள் உடைய தோளைச் சேராதார்.

பரிமேலழகர் உரைவிளக்கம்

அகலம், ஆழம், பொருளுடைமை முதலியவற்றான் அளவிடப்படாமையின் நாமநீர் என்றார். நலத்திற்கு என்பது நலக்கு எனக் குறைந்து நின்றது. உரிச்சொல் ஈறு திரிந்துநின்றது. இருமையினும் நன்மை எய்துவர் என்பதாம்.

('நாம்' என்றசொல் 'நாம' எனத் திரிந்து வந்தது- மெய்)

கருணாநிதி  உரை:
பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்.

சாலமன் பாப்பையா உரை:
அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே.

Couplet:
Is it asked, who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ? Those who touch not the shoulder of her who belongs to another.

Explanation:
Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide?
The men who touch not her that is another's bride.

No comments