Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0146

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பிறனில் விழையாமை - Not Coveting another's Wife

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்.

மு.வ உரை:

பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

பரிமேலழகர் உரை 
இல் இறப்பான்கண்= பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து;
பகை பாவம் அச்சம் பழி என நான்கும் இகவாவாம்= பகையும் பாவமும் அச்சமும் குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
எனவே இருமையும் இழத்தல் பெற்றாம். இவை ஆறுபாட்டானும் பிறனில் விழைவான்கட் குற்றம் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.

Couplet:

Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wife.

Explanation:

Who home ivades, from him pass nevermore,

 Hatred and sin, fear, foul disgrace; these four.


No comments