Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0131

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

ஒழுக்கமுடைமை - The Possession of Decorum

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

மு.வ உரை:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

பரிமேலழகர் உரை(இதன்பொருள்): ஒழுக்கம் விழுப்பம் தரலான்= ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்= அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.

பரிமேலழகர் உரைவிளக்கம்: உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டுவருவிக்கப்பட்டது. அதனால் அவ்விழுப்பம் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். உயிர் எல்லாப்பொருளினும் சிறந்ததாயினும் ஒழுக்கம்போல விழுப்பம் தாராமையின், 'உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.

கருணாநிதி  உரை:
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

Couplet:
Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.

Explanation:
'Decorum' gives especial excellence; with greater care
'Decorum' should men guard than life, which all men share.

No comments