Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0113

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

நடுவு நிலைமை - Impartiality

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

மு.வ உரை:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.


பரிமேலழகர் உரை

நன்றே தரினும்= தீங்கன்றி நன்மையே பயந்ததாயினும்;

நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்= நடுவுநிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே யொழிய விடுக.


பரிமேலழகர் உரை விளக்கம்

நன்மை பயவாமையின், 'நன்றே தரினும்' என்றார். இகத்தலான் என்பது இகந்து எனத் திரிந்து நின்றது.

இவையிரண்டு பாட்டானும் முறையே நடுவுநிலைமையான் வந்த செல்வம் நன்மைபயத்தலும், ஏனைச்செல்வம் தீமைபயத்தலுங் கூறப்பட்டன.


கருணாநிதி  உரை:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நன்மையே தருவதாக இருந்தாலும் நீதியை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

Couplet:
Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.

Explanation:
Though only good it seem to give, yet gain
By wrong acquired, not e'en one day retain! .

No comments