குறள் - 0098
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இனியவை கூறல் - The utterance of pleasant words
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
மு.வ உரை:
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.
பரிமேலழகர் உரை
சிறுமையுள் நீங்கிய இன்சொல்= பொருளாற் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்;
மறுமையும் இம்மையும் இன்பம் தரும்= ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
மறுமையின்பம் பெரிதாகலின் முற்கூறப்பட்டது. இம்மையின்பமாவது, உலகம் தன்வயத்தது ஆகலான் நல்லன எய்தி இன்புறுதல்.
இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கெய்துதல் வலியுறுத்தப்பட்டது.
கருணாநிதி உரை:
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
Couplet:
Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.
Explanation:
Sweet kindly words, from meanness free, delight of heart,
In world to come and in this world impart.

No comments