Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0097

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

இனியவை கூறல் - The utterance of pleasant words


நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று 

பண்பின் தலைப்பிரியாச் சொல்.

மு.வ உரை:

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

பரிமேலழகர் உரை: 
நயன் ஈன்று நன்றி பயக்கும்= ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்;
பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்= பொருளாற் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல்.
பரிமேலழகர் உரைவிளக்கம்: 
நீதி உலகத்தோடு பொருந்துதல். 'பண்'பென்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் ஒருசொல் நீர்மைத்து.

கருணாநிதி  உரை:

நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.

Couplet:

That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).

Explanation:

The words of sterling sense, to rule of right that strict adhere, 

 To virtuous action prompting, blessings yield in every sphere.


No comments