Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0092

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இனியவை கூறல் - The utterance of pleasant words

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

மு. உரை:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

பரிமேலழகர் உரை:
அகன் அமர்ந்து ஈதலின் நன்று= நெஞ்சுவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று;
முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப்பெறின்= கண்டபொழுதே முகம் இனியனாய் அதனோடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல்போலப் பொருள்வயத்தன்றித் தன்வயத்ததாயினும், அறநெஞ்சுடையார்க்கல்லது இயல்பாகவின்மையின், அதனினும் அரிதுஎன்னுங் கருத்தான், 'இன்சொலனாகப்பெறின்' என்றார்.

கருணாநிதி  உரை:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.

Couplet:
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.

Explanation:
A pleasant word with beaming smile,s preferred,
Even to gifts with liberal heart conferred.


No comments