Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0079

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
அன்புடைமை  - The Possession of Love

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை 
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

மு. உரை:
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.

பரிமேலழகர் உரை:
இதன்பொருள்) யாக்கையகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு = யாக்கை யகத்தின்கணின்று இல்லறத்திற் குறுப்பாகிய அன்புடையரல்லாதார்க்கு;
புறத்து உறுப்பு எல்லாம் எவன்செய்யும் = ஏனைப் புறத்தின்கணின்று உறுப்பாவனவெல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன உதவியைச்செய்யும்?

பரிமேலழகர் உரைவிளக்கம்:
'புறத்துறுப்பாவன', இடனும் பொருளும் ஏவல்செய்வாரு முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றாற் பயனின்மையின், 'எவன்செய்யு' மென்றார். உறுப்புப் போறலின் 'உறுப்' பெனப்பட்டன. யாக்கையிற் கண் முதலிய உறுப்புக்களெல்லாம் என்னபயனைச்செய்யும் மனத்தின்கணுறுப்பாகிய அன்பிலாதார்க் கென்றுரைப்பாருமுளர். அதற்கு இல்லறத்தோடு யாதுமியைபில்லாமை யறிக.

கருணாநிதி  உரை:
அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?.

சாலமன் பாப்பையா உரை:
குடும்பத்திற்கு அக உறுப்பாகிய அன்பு இல்லாவதர்களுக்கு வெளி உறுப்பாக விளங்கும் இடம், பொருள், ஏவல் என்பன என்ன பயனைத் தரும்?.

Translation:
Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.

Explanation:
Though every outward part complete, the bodys fitly framed; 
What good, when soul within, of love devoid, lies halt and maimed?.


No comments