Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0078

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
அன்புடைமை  - The Possession of Love

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

மு. உரை:
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

பரிமேலழகர் உரை:
இதன்பொருள்) அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை = மனத்தின்கணன்பி்ல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்;
வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று = வன்பாலின்கண் வற்றலாகிய மரந் தளிர்த்தாற்போலும்.

பரிமேலழகர் உரைவிளக்கம்
கூடாதென்பதாம். வன்பால் வன்னிலம். வற்றலென்பது பால்விளங்கா வஃறிணைப்படர்க்கைப்பெயர்.

கருணாநிதி  உரை:
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
மனத்தில் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தில் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

Couplet:
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.

Explanation:
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.


No comments