குறள் - 0072
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
அன்புடைமை - The Possession of Love
அன்பிலார் எல்லாம்
தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
என்பும் உரியர் பிறர்க்கு.
மு.வ உரை:
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
பரிமேலழகர் உரை:
இதன்பொருள்) அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் = அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானுந் தமக்கே யுரியர்;
அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் = அன்பிலாதார் அவற்றானேயன்றித் தம்முடம்பானும் பிறர்க்குரியர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
ஆனுருபுகளும் பிரிநிலையேகாரமும் விகாரத்தாற் றொக்கன. என்பு ஆகுபெயர். என்புமுரிய ராதல்,
"தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
றபுதி யஞ்சிச் சீரை புக்கோன்" (புறநானூறு, 43) முதலாயினார்கட் காண்க.
கருணாநிதி உரை:
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.
சாலமன் பாப்பையா உரை:
அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.
அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.
Couplet:
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.
Explanation:
The loveless to themselves belong alone;
The loving men are others to the very bone.
The loveless to themselves belong alone;
The loving men are others to the very bone.

No comments