குறள் - 0070
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
புதல்வரைப் பெறுதல்
- The wealth of children
மகன்தந்தைக்கு ஆற்றும்
உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
என்நோற்றான் கொல்எனும் சொல்.
மு.வ உரை:
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி = கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது;
இவன்தந்தை என் நோற்றான்கொல் எனும் சொல் = தன்னறிவு மொழுக்கமுங் கண்டார் இவன்றந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தான்கொல்லோவென்று சொல்லுஞ் சொல்லை நிகழ்த்துதல்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
சொல் லென்பது நிகழ்த்துதலாகிய தன்காரணந் தோன்ற நின்றது. நிகழ்த்துதல் அங்ஙனஞ்சொல்லவொழுகல்.
இதனாற் புதல்வன் கடன் கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

Couplet:
(So to act) that it may be said by what great penance did his father beget him, is the benefit which a son should render to his father.
(So to act) that it may be said by what great penance did his father beget him, is the benefit which a son should render to his father.
Explanation:
To sire, what best requital can by grateful child be done?
To make men say, 'What merit gained the father such a son?'.
To sire, what best requital can by grateful child be done?
To make men say, 'What merit gained the father such a son?'.

No comments