Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0069

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
புதல்வரைப் பெறுதல்  - The wealth of children

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் 
சான்றோன் எனக்கேட்ட தாய்.

மு. உரை:
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் = தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்;
தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் = தன்மகனைக் கல்வி கேள்விகளா னிறைந்தானென்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
கவானின்கட் கண்ட பொதுவுவகையினுஞ் சால்புடையனெனக் கேட்ட சிறப்புவகை பெரிதாகலின் பெரிதுவக்கு மெனவும், பெண்ணியல்பாற் றானாக வறியாமையிற் கேட்டதாயெனவுங் கூறினார். அறிவுடாயரென்பது வருவிக்கப்பட்டது. சான்றோரென்றற் குரியர் அவராகலின்.
தாயுவகைக்களவின்மையின் அஃதிதனாற் பிரித்துக் கூறப்பட்டது.
கருணாநிதி  உரை:
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

சாலமன் பாப்பையா உரை:
தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

Couplet:
The mother who hears her son called a wise man will rejoice more than she did at his birth.

Explanation:
When mother hears him named 'fulfill'd of wisdom's lore,' 
 Far greater joy she feels, than when her son she bore.


No comments