Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0067

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
புதல்வரைப் பெறுதல்  - The wealth of children

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்.

மு. உரை:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) தந்தை மகற்கு ஆற்றும் நன்றி = தந்தை புதல்வனுக்குச் செய்யும் நன்மையாவது;
அவையத்து முந்தி இருப்பச் செயல் = கற்றாரவையின்கண் அவரினும் மிக்கிருக்குமாறு கல்வியுடையனாக்குதல்.

பரிமேலழகர் உரை:
பொருளுடையனாக்குதல் முதலாயின துன்பம் பயத்திலின் நன்மையாகாவென்பது கருத்து.
இதனால் தந்தை கடன் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

Couplet:
The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

Explanation:
Sire greatest boon on son confers, who makes him meet, 
In councils of the wise to fill the highest seat.


No comments