Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0062

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

புதல்வரைப் பெறுதல்  - The wealth of children

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

மு.வ உரை:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

பரிமேலழகர் உரை

(இதன் பொருள்) எழுபிறப்பும் தீயவை தீண்டா = வினைவயத்தாற் பிறக்கும் பிறப்பேழின் கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா;

பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின் = பிறராற் பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல்வரைப் பெறுவானாயின்.

பரிமேலழகர் உரைவிளக்கம்

அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணமாகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுபவனாயி னென்றவாறாயிற்று.

பிறப்பேழாவன:

"ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம்

நீர்பறவை நாற்காலோர் பப்பத்துச்-சீரிய

பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த

வந்தமில்சீர்த் தாவரநா லைந்து."

தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர்செய்யுந்தான தருமங்கட்கு அவர் நற்குணங் காரணமாகலின், பண்பென்னும் காரணப்பெயர் காரியத்தின்மே னின்றது.


கருணாநிதி  உரை:
பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

சாலமன் பாப்பையா உரை:
பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

Couplet :

The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.

Explanation:
Who children gain, that none reproach, of virtuous worth,
No evils touch them, through the sev'n-fold maze of birth.

No comments