Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0059

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

மு. உரை:
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) புகழ் புரிந்த இல் இலோர்க்கு = புகழை விரும்பிய இல்லாளை யில்லாதார்க்கு;
இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை = தம்மை யிகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்கவேறு போல நடக்கும் பெருமிதநடை இல்லை.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
புரிந்த வென்னும் பெயரெச்சத் தகரம் விகாரத்தாற்றொக்கது. பெருமிதமுடையானுக்குச் சிங்கவேறு நடையா னுவமமாகலின் 'ஏறுபோ' லென்றார்.
இதனால் தகைசான்ற சொற்காவாவழிப்படுங் குற்றம் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

Couplet:
The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.

Explanation:
Who have not spouses that in virtue's praise delight, They lion-like can never walk in scorner's sight.


No comments