Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0046

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இல்வாழ்க்கை - Domestic Life

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.

மு. உரை:
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் = ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவானாயின்;
புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன் = அவன் அதற்குப் புறமாகிய நெறியிற் போய்ப்பெறும் பயன் யாது?

பரிமேலழகர் உரைவிளக்கம்:
அறத்தா றென்பது பழியஞ்சிப் பகுத்துண்டலும், அன்புடையுமென மேற்சொல்லிய ஆறு.
புறத்தாறு இல்லைவிட்டு வனத்துச் செல்லு நிலை.
அந்நிலையின் இது பயனுடைத்தென்பார், 'போஒய்ப்பெறுவதெவ' னென்றார். 

கருணாநிதி  உரை:
அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.

சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.

Couplet:
What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?

Explanation:
If man in active household life a virtuous soul retain, What fruit from other modes of virtue can he gain?


No comments