Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0026

அறத்துப்பால் - Virtue

பாயிரவியல் - Prologue 

நீத்தார் பெருமை - The Greatnes of Ascetics

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

மு.வ உரை:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

பரிமேலழகர் உரை:

(இதன் பொருள்) செயற்கரிய செய்வார் பெரியர் = ஒத்த பிறப்பினாராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செயவார் பெரியர்;


செயற்கரிய செய்கலாதார் சிறியர் = அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர்.


பரிமேலழகர் உரைவிளக்கம்:

செயற்கு எளியவாவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறிவழிகளால் புலன்களிற் செலுத்தலும், வெஃகலும், வெகுடலும் முதலாயின.


செயற்கு அரியவாவன இயமம், நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புக்கள்.

நீரிற் பலகான் மூழ்கல் (புறப்பொருள் வெண்பா மாலை, வாகைத்திணை, 14)முதலாய "நாலிரு வழக்கிற் றாபத பக்கம்" என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.


கருணாநிதி  உரை:
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

Couplet:
The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.

Explanation:
Things hard in the doing will great men do; Things hard in the doing the mean eschew.

No comments