குறள் - 0014
அறத்துப்பால் - Virtue
பாயிரவியல் - Prologue
வான் சிறப்பு - The Blessing of Rain
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மு.வ உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

பரிமேலழகர் உரை:
உழவர் ஏரின்
உழாஅர் = உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்;
புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் = மழை என்னும் வருவாய் தன்பயன் குன்றின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
'குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது.
உணவின்மைக்குக் காரணம் கூறியவாறு.
கருணாநிதி உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

Couplet:
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

Explanation:
If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more.

No comments