Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0005

அறத்துப்பால் - Virtue
பாயிரவியல் - Prologue
கடவுள் வாழ்த்து - The Praise of the God

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு. உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பரிமேலழகர் உரை:
இன்னதன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் 'அவிச்சை'யைஇருள் என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையுஞ் சேரா' என்றும் கூறினார்.
இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே 'பொருள்சேர் புகழ்' எனப்பட்டது.

கருணாநிதி  உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

Couplet:
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

Explanation:
The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well.


No comments