Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0178

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

வெஃகாமை - Not Coveting 

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 

வேண்டும் பிறன்கைப் பொருள்.

மு.வ உரை:

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

பரிமேலழகர் உரை(இதன் பொருள்)
செல்வத்திற்கு அஃகாமை யாதுஎனின்= சுருங்கன்மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாதென்று ஒருவன் ஆராயின்;
பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை= அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
அஃகாமை ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாதென்பதாயிற்று.

கருணாநிதி  உரை:

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.

Couplet:

If it is weighed, what is the indestructibility of wealth, it is freedom from covetousness.

Explanation:

What saves prosperity from swift decline? 

 Absence of lust to make another's cherished riches thine!.

No comments