குறள் - 0173
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
வெஃகாமை - Not Coveting
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
மற்றின்பம் வேண்டு பவர்.
மு.வ உரை:
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

பரிமேலழகர்
உரை:
சிற்றின்பம்
வெஃகி அறன் அல்ல செய்யாரே= பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத
இன்பத்தை விரும்பி அவர்மாட்டு அறனல்லாத செயல்களைச் செய்யார்;
மற்றின்பம்
வேண்டுபவர்= அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தைக் காதலிப்பவர்.
பரிமேலழகர்
உரைவிளக்கம்:
பாவத்தான்
வருதலின் அப்பொழுதே அழியும் என்பார், 'சிற்றின்பம்' என்றார்.
மற்றை இன்பம் என்பது, 'மற்றின்பம்' என
நின்றது.
கருணாநிதி உரை:
அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.

சாலமன்
பாப்பையா உரை:
அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.

Couplet:
Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life).

No comments