Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0162

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

அழுக்காறாமை - Not Envying

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் 

அழுக்காற்றின் அன்மை பெறின்.

மு.வ உரை:

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறெ?ன்றும் இல்லை.

பரிமேலழகர் உரை
யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்- யாவர்மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்;
விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை= மற்றவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒபபது இல்லை.
பரிமேலழகர் உரை விளக்கம்
அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார் யார்மாட்டும் என்றார். அன்மை வேறாதல். இவை இரண்டு பாட்டானும், அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது

கருணாநிதி  உரை:

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:

எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.

Couplet:

Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.

Explanation:

If man can learn to envy none on earth, 

 'Tis richest gift, -beyond compare its worth.


No comments