Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0160

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பொறையுடைமை - Forbearance

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் 

இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

மு.வ உரை:

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

பரிமேலழகர் உரை 
உண்ணாது நோற்பார் பெரியர்= விரதங்களான் ஊணைத் தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்;
பிறர் சொ்ல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின்= அவர் பெரியராவது, தம்மைப் பிறர்சொல்லும் இன்னாத சொல்லைப் பொறுப்பாரின் பின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பிறர் அறிவிலாதார். நோலாமைக்கு ஏதுவாகிய இருவகைப் பற்றோடு நின்றே நோற்றலின் 'இன்னாச் சொல் நோற்பாரிற் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது

கருணாநிதி  உரை:

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

Couplet:

Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others.

Explanation:

Though 'great' we deem the men that fast and suffer pain, 

 Who others' bitter words endure, the foremost place obtain.

No comments