Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0141

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

பிறனில் விழையாமை - Not Coveting another's Wife

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

மு.வ உரை:
பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

பரிமேலழகர் உரை

பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை= பிறனுக்குப் பொருளாந் தன்மையை உடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை;

ஞாலத்து அறம் பொருள் கண்டார்கண் இல்= ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள்நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை.


பரிமேலழகர் உரை விளக்கம்

'பிறன் பொருள்' பிறனுடைமை. 'அறம், பொருள்' என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை தொக்குநின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்பநூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் பரகீயம்(=பிறர்க்கு உரியது) என்று கூறுவாராகலின், 'அறம்பொருள் கண்டார்கண் இல்' என்றார். எனவே, அப்பேதைமை உடையார்மாட்டு அறமும் பொருளும் இல்லை யென்பது பெறப்பட்டது.


கருணாநிதி  உரை:
பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.

Couplet:
The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

Explanation:
Who laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own.

No comments