Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0094

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
இனியவை கூறல் - The utterance of pleasant words

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

மு. உரை:
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

பரிமேலழகர் உரை: 
யார் மாட்டும் இன்பு உறூஉம் இன்சொலவர்க்கு= எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு;
துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும்= துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம்.

பரிமேலழகர் உரைவிளக்கம்: 
நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை யுடைமையின், 'துவ்வாமை' யென்றார். 'யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொலவர்க்கு'ப் பகையும் நொதுமலுமின்றி உள்ளது நண்பேயாம்; ஆகவே, அவர் எல்லாச் செல்வமும் எய்துவர் என்பது கருத்து.

கருணாநிதி  உரை:
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

Couplet:
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.

Explanation:
The men of pleasant speech that gladness breathe around,
Through indigence shall never sorrow's prey be found.


No comments