Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0080

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
அன்புடைமை  - The Possession of Love

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

மு. உரை:
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

பரிமேலழகர் உரை :
(இதன்பொருள்) அன்பின் வழியது உயிர்நிலை = அன்பு முதலாக அதன்வழி நின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது;
அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த = அவ்வன்பில்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலாற் போர்த்தனவாம்; உயி்ர்நின்றனவாகா.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
இல்லறம் பயவாமையின் அன்னவாயின.
இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படுங் குற்றம் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்.

Couplet:
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.

Explanation:
Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.


No comments