Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0074

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
அன்புடைமை  - The Possession of Love

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

மு. உரை:
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) அன்பு ஆர்வமுடைமை ஈனும் = ஒருவனுக்குத் தொடர்புடையார்மாட்டுச் செய்தவன்பு அத்தன்மையாற் பிறர்மாட்டும் விருப்பமுடைமையைத் தரும்;
அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும் = அவ்விருப்பமுடைமைதான் இவற்குப் பகையும் நொதுமலுமில்லையாய் யாவரும் நண்பென்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத் தரும்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
'உடைமை' உடையனாந் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளுமெய்துதற் கேதுவாகலின், அதனை 'நாடாச்சிற' ப்பென்றார்.

கருணாநிதி  உரை:
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.

Couplet:
Love begets desire: and that (desire) begets the immeasurable excellence of friendship.


Explanation:
From love fond yearning springs for union sweet of minds;
And that the bond of rare excelling friendship binds.


No comments