Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0066

அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
புதல்வரைப் பெறுதல்  - The wealth of children

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

மு. உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) குழல் இனிது யாழ் இனிது என்ப = குழலிசை யினிது யாழிசை யினிதென்று சொல்லுவர்;
தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் = தம் புதல்வருடைய குதலைச் சொற்களைக் கேளாதவர்.

பரிமேலழகர் உரைவிளக்கம்:
'குழல்' 'யாழ்' என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும் மழலைச்சொல் இனிதென்பரென்பது குறிப்பெச்சம்.
இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்புவகையானுங் கூறியவாறு.
இவை மூன்று பாட்டானும் இம்மைப்பயன் கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

Couplet:
The pipe is sweet, the lute is sweet, say those who have not heard the prattle of their own children.

Explanation:
'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,
Who music of their infants' lisping lips have never heard.


No comments