குறள் - 0064
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
புதல்வரைப் பெறுதல்
- The wealth of children
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
சிறுகை அளாவிய கூழ்.
மு.வ உரை:
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) அமிழ்தினும் ஆற்ற இனிதே = சுவையான் அமிழ்தத்தினும் மிக வினிமை யுடைத்து;
தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் = தம் மக்களது சிறுகையா னளாவப்பட்ட சோறு.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
சிறுகையா னளாவலாவது #"இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும், நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தல்".
#(புறநானூறு- 188)
கருணாநிதி உரை:
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
Couplet:
The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.
The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.
Explanation:
Than God's ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have played.
Than God's ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have played.

No comments