Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0061

அறத்துப்பால் - Virtue


இல்லறவியல் - Domestic Virtue


புதல்வரைப் பெறுதல்  - The wealth of children

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

 மக்கட்பேறு அல்ல பிற.


மு.வ உரை:

பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) பெறுமவற்றுள் = ஒருவன் பெறும் பேறுகளுள்;
அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற = அறிய வேண்டுவன அறிதற்குறிய மக்களைப் பெறுதலல்லது பிறபேறுகளை;
யாம் அறிவதில்லை = யாம் மதிப்பதில்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'அறிவ' தென்பது அறிதலைச்செய்வதென அத்தொழின்மேனின்றது. காரணமாகிய வுரிமை காரியமாகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத்துணிவுபற்றி 'அறிந்த' வென இறந்தகாலத்தாற் கூறினார்.
'அறிவறிந்த' வென்றதனான், மக்களென்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது.

கருணாநிதி  உரை:

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.


சாலமன் பாப்பையா உரை:

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

Couplet:

Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.


Explanation:

As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she.

No comments