குறள் - 0054
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
திண்மைஉண் டாகப் பெறின்.
மு.வ உரை:
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) பெண்ணின் பெருந்தக்க யா உள = ஒருவனெய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்களியாவையுள;
கற்பு என்னும் திண்மை யுண்டாகப் பெறின் = அவண்மாட்டுக் கற்பென்னும் கலங்காநிலைமை யுண்டாகப்பெறின்?
பரிமேலழகர் உரைவிளக்கம்:
கற்புடையாள்போல அறமுதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிறவின்மையின் யாவுள வென்றார்.
இதனாற் கற்புநலத்தது சிறப்புக் கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?.
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?.
சாலமன் பாப்பையா உரை:
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.
Couplet:
What is more excellent than a wife, if she possess the stability of chastity ?.
What is more excellent than a wife, if she possess the stability of chastity ?.
Explanation:
If woman might of chastity retain, What choicer treasure doth the world contain? .
If woman might of chastity retain, What choicer treasure doth the world contain? .
No comments