குறள் - 0053
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife
இல்லதென் இல்லவள்
மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக்
கடை.
மு.வ உரை:
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் = ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கைய ளாயினக்கால் இல்லாததியாது?
இல்லவள் மாணாக்கடை = அவளன்னளல்லாக்கால் உள்ளது யாது?
பரிமேலழகர் உரைவிளக்கம்:
மாண்பெனக் குணத்தின்பெயர் குணிமேனின்றது.
இவை யிரண்டுபாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே பிறவல்ல வென்பது பெறப்பட்டது.
கருணாநிதி உரை:
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?.
Couplet:
If his wife be eminent (in virtue), what does (that man)
not possess ? If she be without excellence, what does (he) possess ?.
Explanation:
There is no lack within the house, where wife in worth
excels, There is no luck within the house, where wife dishonoured dwells.
No comments