குறள் - 0051
அறத்துப்பால் - Virtue
இல்லறவியல் - Domestic Virtue
வாழ்க்கைத் துணைநலம் - The worth of a wife
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
மு.வ உரை:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) மனைத்தக்க மாண்பு உடையளாகித் தற்கொண்டான் வளத்தக்காள் = மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை யுடையளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை யுடையாள்;
வாழ்க்கைத் துணை = அதற்குத் துணை.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
நற்குணங்களாவன: துறந்தார்ப்பேணலும்,விருந்தயர்தலும், வறியார்மாட்டருளுடைமையும்
முதலாயின.
நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டிற்றொழி்ல் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின.
வருவாய்க்குத் தக்கவாழ்க்கையாவது முதலையறிந்து அதற்கியைய அழித்தல்.
இதனால் இவ்விரண்டு நன்மையுஞ்சிறந்தன வென்பது கூறப்பட்டது.
கருணாநிதி உரை:
இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.
சாலமன் பாப்பையா உரை:
பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.
Couplet:
She who has the excellence of home virtues, and can expend
within the means of her husband, is a help in the domestic state.
Explanation:
As doth the house beseem, she shows her wifely dignity; As
doth her husband's wealth befit, she spends: help - meet is she.
No comments