Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

குறள் - 0045

அறத்துப்பால் - Virtue

இல்லறவியல் - Domestic Virtue

 இல்வாழ்க்கை - Domestic Life

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
 பண்பும் பயனும் அது.

மு. உரை:
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் = ஒருவனில்வாழ்க்கை தன் றுணைவிமேற் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறத்தினையு முடைத்தாயின்;
அது பண்பும் பயனும் = அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனுமாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
நிரனிறை.
இல்லாட்குங் கணவற்கும் நெஞ்சொன்றாகாவழி இல்லறங் கடைபோகாமையின், அன்புடைமை பண்பாயிற்று, அறனுடைமை பயனாயிற்று.
இவை மூன்று பாட்டானும் இன்னிலையினின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.

கருணாநிதி  உரை:
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

சாலமன் பாப்பையா உரை:
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

Couplet:
If the married life possess love and virtue, these will be both its duty and reward.

Explanation:
If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain.


No comments